2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காணாமற்போனவர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்குள்ளிலிருந்து, இன்று (10) காலை எரியூட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், வவுனியாவில் செவ்வாய்க்கிழமை (08) முதல் காணாமற்போயிருந்த சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த சுகந்தன் (வயது 27) என அடையாளங்காப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர், இறுதியாக வவுனியா - கள்ளிகுளம் பகுதியில் நின்றுள்ளதாக, அவரது அலைபேசி தரவுகள் (ஜிபிஎஸ்) வெளிக்காட்டியுள்ளதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X