2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காணிகளை அபகரிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டத்தில், அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக, வடக்கு மாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று ​(29), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துரை்ா ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய உதயராசா என்பவர், பல காணி மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் தகவல்களை வெளிகொணர்ந்ததை அடுத்து, அவர் இடமாற்றப்பட்டாரெனவும் எனினும் அவரை பணி இடை நிறுத்தம் செய்து, அவருக்கெதிராக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

எனவே காணி சம்பந்தமான விசாரணை ஆணைக்குழு ஒன்று நிறுவ வேண்டுமென வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், அக்குழு ஊடாக வடக்கில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் வாரியாகவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கூறினர்.

அத்துடன், இந்தியாவில் உள்ள மக்களின் காணிகளை பாதுகாக்க வேண்டுமெனவும் ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X