2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிரவல் அகழ்வை நிறுத்துமாறு மகஜர்

க. அகரன்   / 2020 மே 28 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா – கன்னாட்டி, பெரியதம்பனை வீதியில் அமைந்துள்ள கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவல் அகழ்வுப் பணிகளை நிறுத்துமாறு கோரி, மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வுப் பணிகள் காரணமாக, 320 ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகஜர், செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆகியோரிடம், நேற்று (27) கையளிக்கப்பட்டுள்ளது என,  கன்னாட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அகழ்வுப் பணி, கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்தது என்றும் எனினும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு சமீபத்தில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இக்கிராமத்தைச் சூழவுள்ள 5க்கும் மேற்பட்ட குளங்கள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்தக் குளங்களை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இதை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மகஜரின் பிரதிகள், வடமாகாண ஆளுநர், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், கனிய வள அமைச்சு, நன்னீர் விவசாய அமைச்சு, கடற்றொழில்  நீரியல்வள, மூலகங்கள் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகம் கொழும்பு, வன பரிபாலனத்திணைக்களம், பறயனாளங்குளம் பொலிஸ் நிலையம், கன்னாட்டி கிராம அலுவலகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .