Freelancer / 2022 ஜூலை 11 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் நகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு இன்று காலை முதல் எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் எரிபொருள் சுமுகமான முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாய்க்கும், முச்சக்கர வண்டிக்கு 2,500 ரூபாய்க்கும் , கார்களுக்கு 5,000 ரூபாய்க்கும் பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் வழங்கப்படாத கிராமங்களுக்கு அடுத்தகட்ட எரிபொருள் வளங்களின் போது வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. .(R)
22 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago