2025 மே 17, சனிக்கிழமை

கிளி. சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளமொன்றில் செய்தி வெளியாகியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தால், இன்று (19) பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், சான்றுப்பொருளாகப் பாரப்படுத்தப்பட்டிருந்த பொருள்களை, சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக, இணைத்தளமொன்றில் செய்தி வௌியாகியிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .