Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஜூலை 19 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி இரணைதீவு மக்களுடைய காணிகளை, அரசாங்கம் விரைவாக விடுவிக்கும் சாத்திகக்கூறு காணப்படுவதாகம் இதற்கு தங்களாலான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் வசமுள்ள கிளிநொச்சி இரணைதீவை விடுவிக்குமாறு கோரி, அந்தப்பகுதி மக்களால், இவ்வாண்டு மே மாதம் முதலாம் திகதி தொட முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் 80 நாட்களைத் தாண்டியும் தொடரந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பூநகரி பிரதேசத்தில், நேற்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், தங்களுக்கான நல்ல பதிலைத் தாருங்கள் என இரணைதீவு மக்கள் சார்பாக சமுகளித்திருந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதேவேளை, ஒரிரு நாட்களுக்குள் அரசாங்கத்திடம் பேசி, உரிய பதிலை, பிரதேச செயலாளர் ஊடாக வழங்குவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
42 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago