Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம், இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜூன் மாதம் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை நிதி கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சிப் பொலிஸார் விடுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெரா பதிவுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து, சந்தேக நபர் ஒருவரை கைது செய்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இன்று (07வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்றைய தினம் (07மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பலரை கைது செய்யவேண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தாலும், சந்தேக நபருக்கு சார்பாகவே செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், இன்றைய தினம் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி மன்றில் ஆஜராகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கவனத்திலெடுத்த மன்று, மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு, எதிராக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பித்து உத்தரிவட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago