2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிளிநொச்சி வீதியெங்கும் சுமந்திரனுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள்

Editorial   / 2020 மே 20 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி  வீதியெங்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ.சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.

இன்று (20) அதிகாலை, கிளிநொச்சியின் வீதியெங்கும், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. 

“வேண்டாம் சுமந்திரன்” எனும் தலைப்பில், “தமிழர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய சுமந்திரனை தோற்கடிப்போம்” என, அந்தத் துண்டுபிரசுரத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்தத் துண்டுப் பிரசுரத்தின்  கீழே,  தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கிளிநொச்சி மக்கள் என உரிமைக் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .