Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினூடாக வழங்கப்பட்டு வருகின்ற குடிநீர், குடிப்பதற்கு உகந்த சுத்தமான நீர் அல்ல எனவும், ஒரு விதமான நிறத்துடன் காணப்படுகிறது என்றும் பொது மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
குழாய் வழி ஊடாக தங்களுது வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீரை போத்தல்களில் பெற்று, அதனை கிணற்றிலிருந்து பெறப்படுகின்ற நீருடன் ஓப்பிடும் போது, வேறுபாடு அப்பட்டமாக தெரிகிறது. இது குடிப்பதற்கு உகந்த நீரல்ல எனவும் பொது மக்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகருக்கும் நகரை அண்டிய பகுதிகளுக்குமான குடி நீர் விநியோகமானது, இரணைமடு குளத்திலிருந்து இடது கரை நீர்ப்பாசன வாய்க்கால் ஊடாக கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு, பின்னர் கிளிநொச்சி குளத்திற்கு அருகிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, டிப்போச் சந்திக்கருகிலுள்ள நீர்த்தாங்கி அனுப்பட்டு, அங்கிருந்து பொது மக்களின் பாவணைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இரணைமடுகுளத்து நீர் ஒரு வித பச்சை நிறத்தில் காணப்படுகிறது. எனவே, குழாய் வழி மூலம் விநியோகிக்கப்படுகின்ற நீரும் குளத்து நீரைவிட குறைவான பச்சை நிறத்தில் காணப்படுகிறது என்றும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
25 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago
48 minute ago