Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 மே 01 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் நிகழ்வுகள் முழங்காவில் பகுதியில் பல்வேறு பொதுஅமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வுகள் கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
நாச்சிக்குடா சந்தியிலிருந்து தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சித்தரிக்கின்ற ஊர்திகளுடன் கூடிய பேரணியாக முழங்காவில் விநாயாகர் விளையாட்டுக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அங்கு மே நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
நிகழ்வில் கடற்தொழில் சங்கங்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் கூட்டுறவுச்சங்கங்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, மற்றும் பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி, ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
22 minute ago
31 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
43 minute ago
52 minute ago