Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் இவ்வாண்டு ஆரம்பத்தில் டெங்குத் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இந்நிலையில், கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள பிரிவுகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மூலம் நோயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தற்போது இடையிடையே மழை பெய்வதனால், மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களில் தொடர்ந்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவிலேயே அதிக டெங்குநோய் பரவக்கூடிய சூழல்கள் காணப்படுவதாகவும் இப்பகுதியில் தொடர்ந்தும் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, எதிர்வரும் 20ஆம்திகதி தொடக்கம் 26ஆம்திகதி வரைக்கும் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற டெங்கு விழிப்புணர்வு வேலைத் திட்டங்களும் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago