2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் விசேட கூட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு, மதுபான உற்பத்தி, மரம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என்பவற்றைத் தடுத்தும் நிறுத்தும் முகமாக,  கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கூட்டம், நாளை (03) முற்பகல் 10 மணிக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான மு.சந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, கரைச்சி  பிரதேச செயலாளர்கள், பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப் படை உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய திணைக்களங்களின் உயரதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .