Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவுக்கான போக்குவரத்துச் சேவையை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சிச் சாலையிலிருந்து, பல்வேறு இடங்களுக்குமான போக்குவரத்துக்களில் பஸ்கள் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக வெளிமாவட்ச்ட சேவைகள், குறுந்தூர சேவைகள், பாடசாலைச், சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கான சேவையை மேற்கொள்வதற்கான வழித்தட அனுமதிகளை வழங்குமாறு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகின்றபோதும், இதுவரை அதற்கான அனுமதிகள் எவையும் வழங்கப்படவில்லை. குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து தினமும் தனியார் பஸ் சேவைகள் எட்டு இடம்பெற்று வருகின்றன.
மேற்கூறப்பட்ட அனுமதியை வழங்கக் கோரி வட மாகாண போக்குவரத்து அமைச்சு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களுக்கும் மகஜர்கள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை அதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள கிளிநொச்சி சாலை நிர்வாகம் வட மாகாண முதலமைச்சருக்கு மிக விரைவில் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025