Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மே 24 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - பரந்தன் பூநகரி வீதியில் 14ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் பி.கே. இளங்கீரன் தெரிவித்தார்.
குடமுருட்டி பாலத்தின் இரும்புகள், விசமிகளால் திருடப்பட்டுள்ளமையால், பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட பாலத்தின் பாகங்களைப் பொருத்தும் பணிகள், தற்போது இடம்பெற்று வருகின்றன.
அத்துடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் இதுவரை முக்கிய சந்தேக நபர்கள் எவரையும் கைது செய்யவில்லையெனவும் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் பிகே. இளங்கீரன் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
9 hours ago
16 May 2025