Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 21 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிட்குட்பட்ட கார்மேல் நகர் கிராமத்தில் வசிக்கும் சுமார் 70க்கும் அதிகமான குடும்பத்தினர் குடி நீரின்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த கார் மேல் நகர் கிராமத்திலிருந்து ஆழ்துளை கிணறு மூலமாக சிலாவத்துறைப் பகுதிக்கு, குழாய் மூலமாக நீர் கொண்டு செல்லப்பட்டு, சிலாவத்துறைப் பகுதியில் உள்ள 56 வீட்டுத்திட்டம் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.
ஆனால் ஆழ்துளைக் கிணறு மூலமாக நீர் பெறப்படும் இந்தக் கிராமத்து மக்கள் குடிப்பதற்கு நீர் இல்லாத நிலையில் உள்ளனர். இந்தக் கிராமத்திலிருந்து நீர் செல்லும் குழாயில் ஏற்பட்டுள்ள துவாரத்தின் வழியாக கீழே சிந்தும் தண்ணீரையே இந்த மக்கள் பல காலமாக குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
இங்குள்ள ஆழ்துளைக் கிணறு மூலமாக நீர் உறிஞ்சப்படுவதால், அருகில் உள்ள கிணறுகளில் நீர் வற்றி விடுகிறது என்றும் இது தொடர்பாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் கடிதம் மூலமாக தெரியப்படத்தியும் எமது குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு எவரும் முன் வரவில்லை.
அத்துடன், குறித்த பகுதியில் மோட்டர் போடுவதற்கு முன்பாகவே மக்கள் வரிசையில் காத்த நின்று, வீணாகபோகும் நீரை பெறுவதற்கு பெரும்பாடுபடுவதாகவும் கவலையுடன் தெரிவித்த மக்கள், முசலி பிரதேச சபை தவிசாளர் எமது குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக முசலி பிரதேச சபை தவிசாளர் எம்.சுபிஹானனை தொடர்பு கொண்டு கேட்டபோது,
“முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கார்மேல் நகர் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை உள்ளது உண்மை. அவர்களது ஊரில் இருந்து தண்ணீரைப் பெற்று வேறு இடங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அந்த மக்களுக்கு குடி நீர் பிரச்சினை உள்ளமை கவலையளிக்கிறது.
“இவர்களது குடிநீர் பிரச்சினையை முன்னைய பிரதேச சபை நிர்வாகத்தினர் நிவர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கு பெருந்தொகை நிதி தேவைப்படும்.
“ஆகவே, செவ்வாய்க்கிழமை (26) முசலி பிரதேச செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், கார்மேல் நகர் மக்களுடன் சிறப்புக் கலந்துரையாடலை மேற்கொண்டு, அந்த மக்களுக்குரிய குடி நீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .