2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என, பெற்றோர்களால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் உள்ள 65 பாடசாலைகளில் 15 பாடசாலைகளிலும் துணுக்காய் கல்வி வலயத்தில் இயங்குகின்ற 61 பாடசாலைகளில் 15க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது.

குடிநீர் நெருக்கடியைத் தீர்த்து வையுங்கள் என, பெற்றோர்கள் தொடர்ச்சியாக வலயக் கல்விப் பணிமனைகளிடம் கோரிக்கை விடுத்த நிலையிலும் தீர்வுகள் கிடைக்கவில்லை.

தற்போது பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி தொடங்கி உள்ளன.  இந்நிலையில், குடிநீர் நெருக்கடிக்கான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என, பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காயின் கோட்டைக்கட்டியகுளம், பழையமுறிகண்டி உட்பட ஆறு பாடசாலைகளிலும் ஒட்டுசுட்டான் கோட்டத்தில், பழம்பாசி பாடசாலை, புதுக்குடியிருப்பு கோட்டத்தில் பல பாடசாலைகள் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் பாடசாலைகளுக்கு குடிநீரை விநியோகிக்கும் நிலையில் இதற்கான நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .