Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவில் - நாவற்காட்டு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேகநபர்களையும், செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டது.
நாவற்காட்டு பகுதியில், ஓகஸ்ட் 11ஆம் திகதியன்று, குடும்பஸ்தர் ஒருவர் 04 இளைஞர்களால் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பில், முல்லைத்தீவு தலைமைப் பொலிஸ் நிலையைத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதன் காரணமாக, எவ்விதமான நடவடிக்களும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர், இது குறித்து, ஞாயிற்றுக்கிழமை (18) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயத்தில் முறையிட்டதுடன், பொலிஸாரின் அசமந்த செயற்பாடு குறித்தும் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இதையடுத்த, விரைந்து செயற்பட்ட ஆணைக்குழுவின் அதிகாரி, இது குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, முல்லைத்தீவு தலைமைப்பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிக்கு பணித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களையும் கைதுசெய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago