2026 ஜனவரி 21, புதன்கிழமை

குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக்கொலை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட 30 வயதுடைய யோன்சன் மரணமடைந்துள்ளார். 

ஆயுதம் தாங்கிய குழு ஒன்று தாக்கியதில் பலத்த காயமடைந்து, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிதம்பரபுரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற சடலத்தை மீட்டனர்.

சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (R)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X