Editorial / 2020 ஜூன் 03 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் வெடிபொருள்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நீதிமன்ற உத்தரவுடன், இன்று (03) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிசுட்டகுளம் பகுதியில், நிலத்தில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஒருதொகுதி வெடிபொருள்கள் விசேட அதிரடிப் படையினரால், நேற்று (02) மீட்கப்பட்டன.
அப்பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தைப் புனரமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நிலத்தில் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு, கனகராயன்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும், வெடிக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார் செல்களையும் 6 ஆர்.பி.ஜி ரக செல்களையும் மீட்டுள்ளனர்.
இதையடுத்து, இந்தப் பகுதியில் மேலும் வெடிபொருள்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நீதிமன்ற உத்தரவுடன், இன்று (03) அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
24 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago