2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவேன்’

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - அறிவியல் நகரில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி – அறிவியல் நகரில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழில் பயிற்சி நிலையத்துக்கு, இன்று (18) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு மாணவர்கள் மத்தியில் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், தொழில்நுட்பக் கல்லூரியின் குறைபாடுகள் தொடர்பில், துறைசார்ந்த அமைச்சர்களுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்களுடைய கல்விச் செயற்பாட்டை நம்பிக்கையுடன் முன்னெடுக்குமாறுத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .