2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கூட்டத்தில் முரண்பட்டுக்கொண்ட எம்.பிகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா   அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்டுக் கொண்டுக்கொண்டனர்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் சிவனை வணங்கச் செல்லும் வழியில் படிகள் அமைப்பதற்கு அனுமதி கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கருத்து தெரிவித்திருந்தார்.

அதாவது, வனவளத் திணைக்களத்தினர், தொல்லியல் திணைக்களத்தினர் குறித்த படிக்கட்டுகளை அமைப்பதற்கு பொலிஸார் மூலம் தொடர்ந்தும் தடைவிதித்துவருவதாகவும் அதன் பிரகாரம் படிக்கட்டுகளை அமைக்கமுடியாதுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்ததுடன், தற்போது கயிற்றின் உதவியுடனேயே மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.இந் நிலையில், பிரதேச செயலாளர் மாகாணசபையால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டே படிகள் செய்யப்பட்டுள்ளதால் அதனை அமைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அபிருத்திகுழுவில் முடிவெடுப்பதாகவும் உடனடியாக கலாசார அமைச்சருக்கு மாவட்டச் செயலாளர் கடிதம் மூலம் குறித்த சம்பவத்தை அறியப்படுத்த வேண்டும் எனவும் முடிவெடுக்க்பபட்டது.

அதன் நிமித்தம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அரசியல் அமைப்பு போல் அதற்கும், காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

உடனடியாக பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, அவ்வாறு கதைக்காதீர்கள். நீங்கள் எதை கூறவருகின்றீர்கள் என்பது எமக்கு தெரியும். எனவே விடயத்துக்கு வாருங்கள். இப்போது அரசியல் அமைப்பு பற்றி கதைக்க தேவையில்லை எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .