Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி – கரைச்சி, கெங்காதரன் குடியிருப்புப் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, அப்பகுதியில் உள்ள குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்து செல்வதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
கெங்காதரன் குடியிருப்புப் பகுதயில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக, தமக்கான குடிநீர் முதற்கொண்டு ஏனைய தேவைகளுக்கான தண்ணீர் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதில், பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள், இவ்வாறு நீர் பிரச்சினையை வருடாந்தம் நிலவும் வறட்சி காரணமாக எதிர்கொள்வதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, கரைச்சிப் பிரதேச சபையால் ஏற்படுத்தப்பட்ட குழாய் மூலமான குடிநீர் விநியோகத் திட்டம் செயலிழ்நதுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதனை விட, ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட குடிநீர் திட்டமொன்றும் இவ்வாறு செயலிழந்துள்ளதாகத் தெரிவித்த பிரதேச மக்கள், கரைச்சிப் பிரதேச சபையால் பவுசர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டாலும், ஏனைய தேவைகளுக்கான நீரைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago