2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கைகலப்பைத் தடுக்கச் சென்ற பெண் மீது கத்திகுத்து

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பைத் தடுக்கச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று, வெற்றிலைக்கேணி - முள்ளியான் பகுதியில், நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், சுப்ரமணியம் கங்கேஸ்வரி (வயது -72) என, பளை பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயது சிறுவனே, இவ்வாறு குறித்த வயோதிபப் பெண்ணை கத்தியால் குத்தியதாகவும், பொலிஸார் கூறினர்.

வீட்டில் மூத்த சகோதரருக்கும் இளைய சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அம்மம்மா தடுக்கச் சென்றுள்ளார்.

இதன் போது, மூத்த சகோதரனுக்கு கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்ற போது, கத்தி அம்மம்மாவின் நெஞ்சில் பாய்ந்தது.

இச்சம்பவத்தையடுத்து பதற்றமடைந்த சகோதரர்கள், அவரை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 16 வயது சிறுவனைக் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .