2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொடுப்பனவின்மையால் 4,018 பயனாளிகள் பாதிப்படைந்தனர்

Editorial   / 2019 ஜூலை 22 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு.தமிழ்ச்செல்வன்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்துக்கான கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படாயைால், 4,018 வீட்டுத்திட்டப் பயனாளிகள், நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

வீட்டுத் திட்டங்களுக்கு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான முதற்கட்டக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், ஏனைய கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இதனால், வீடமைப்புப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், கிளிநொச்சியில் 1,405 கொத்தனி வீடுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,613 குடும்பங்களுக்குமாக 4,018 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எனினும், கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதென்றும் பருவ மழைக்கு முன்பாக கொடுப்பனவுகளை வழங்கி, வீடுகளை அமைப்பதற்கு உதவுமாறும், வீட்டுத்திட்டப் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் ரி.சுபாஸ்கரனை தொடர்புகொண்டு கேட்டபோது, தலைமை அலுவலகத்தில் இருந்து நிதி கிடைக்காததன் காரணமாக, பயனாளிகளுக்குரிய நிதியை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த வீட்டுத்திட்டத்துக்கு, 20 மில்லியன் ரூபாய் நிதி தருவதாகத் தெரிவித்துள்ளனர் என்றும் குறித்த நிதி கிடைக்கப்பெற்றதும், பயனாளிகளுக்கு கட்டம் கட்டமாக அதை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .