Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜூன் 01 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் போது, அதற்காக உறவினர்களிடம் இருந்து பணம் அறவீடு செய்யப்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர், பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் வவுனியா மாவட்டத்திலேயே தகனம் செய்யப்படுவதாகவும், அவ்வாறு தகனம் செய்தவற்காக, வவுனியா நகர சபையால் நிதி அறவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, சடலமொன்றை தகனம் செய்வதற்கு, 7,000 ரூபாய் அறவிடப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், எனவே, இன்றைய இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு, இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago