2025 மே 17, சனிக்கிழமை

கொரோனா சிகிச்சை பிரிவுக்கு எதிர்ப்பு

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள  கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு, பயணிகள் கொண்டுவரப்பட்டதைக் கண்டித்து, நெளுக்குளத்தில், நேற்று (14) கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில், நெளுக்குளம் சந்தியில், இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம், பம்பைமடு பிரதேசத்துக்கு கொரோனோ என சந்தேகிக்கும்  265 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனரெனவும் தங்களுடைய மக்கள் பீதியிலே காணப்படுகின்ற நிலையில் இலங்கையிலேயே பல்வேறு மாவட்டங்கள் இருக்கின்ற போது வடக்கு - கிழக்கிலே இவ்வாறான நோயாளர்களை  கொண்டு வருவது ஏற்று கொள்ள முடியாதெனவும் கூறினார்.. 

இவ்வாறானவர்களை குடியமர்த்துவதென்பதை இன அழிப்பாகவே சிந்திக்க வேண்டியுள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .