2025 மே 19, திங்கட்கிழமை

‘கோட்டாவைச் சந்திப்பதற்காக த.தே.கூ எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சந்திப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கைகூடவில்லையெனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஆகவே எதிர்வருகின்ற 5 ஆண்டுகள் காலம் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு உட்பட ஏனைய விடயங்களைக் கையாள்வதற்கு, தாங்கள் ஒரு மாற்று வழியைக் கையாள வேண்டியவர்களாகவுள்ளதாகவும் கூறினார். 

 வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (22) நடைபெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இன்றைக்கு இருக்கக் கூடிய கூட்டமைப்பின் தலைமை செயலிழந்துள்ளதாகவும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு, தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமை தேவை எனப் பலராலும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரத் தோல்வி காரணமாக, தாங்கள் மாற்று வழியைக் கண்டுபிடிக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், ஆகவே அதை நோக்கிச் செல்வதன் ஊடாகத்தான் எதிர்காலத்தில், தங்களுடைய பிரச்சினைகளை அரசாங்கத்துடனும் இராஜதந்திரிகளுடனும் பேசிக் கையாளக் கூடிய நிலைமை ஏற்படுமெனவும் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X