2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார மேம்பாட்டு கண்காட்சி

Gavitha   / 2016 ஜூலை 04 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்களினால் சுகாதார மேம்பாட்டு கண்காட்சி இரு நாட்களுக்கு இடம்பெற்றது.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 9 மணியிலிருந்து இந்தக் கண்காட்சி இடம்பெற்றது.

இக்கண்காட்சியில் தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு, சிறுவர் பராமரிப்பு, உளநல சுகாதாரம், தடுப்பு மருந்து ஏற்றல், எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி, உணவு பழக்கவழக்கங்கள், தனிநபர் சுகாதாரம் என்ற பிரிவுகளில் கண்காட்சி இடம்பெற்றிருந்தது.

இக்கண்காட்சிக்கு பிரதம அதிதியாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .