2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

செயலமர்வு

Niroshini   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அரச சார்ப்பற்ற ஐந்து நிறுவனங்களின் ஏற்பாட்டில் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் தாவரங்களை பாதுகாப்பது தொடர்பான செயலமர்வு, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்றது.

இதன்போது, ஆழ்கடல் மற்றும் கரையோரங்களில் காணப்படும் அரியவகை உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. மேலும், கரையொதுங்கும் அரிய வகை உயிரினங்களை அழியாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்தச் செயலமர்வில் ஆராயப்பட்டது.

இதேவேளை, இருக்கும் வளங்களை தொடர்ந்து பாதுகாத்து, அவற்றை விருத்தி செய்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலன், முழங்காவில், நாச்சிக்குடா மற்றும் தர்மபுரம் பொலிஸார், பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, பூநகரி பிரதேச செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள், கடற்படையினர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .