2025 ஜூலை 09, புதன்கிழமை

சீரற்ற வீதியால் சிரமம்

George   / 2017 ஜனவரி 06 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு கரைதுரைபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை பிரதேசத்தில், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான முள்ளியவளை - வற்றாப்பளை பிரதான வீதியின் செப்பனிடல் நடவடிக்கை தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

“சுமார் நான்கு கிலோமீற்றர் நீளமுடைய இவ்வீதி, மீள் குடியேற்றத்துக்குப் பின்பு எவ்விதமான நிரந்தர அபிவிருத்தி வேலைகளும் இன்றி காணப்படுவதுடன், அவ்வீதியில் வெறுமனே 170 மீற்றர்  நீளத்துக்கு மாத்திரம் கொங்கிரீட் இடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளது.

மேலும், அத்தூர இடைவெளிக்குள் அடங்கும் சிறு வாய்க்கால்கள்  சீரமைக்கப்படாமல், அவற்றுக்கு மேலாக, கொங்ரீட் இடப்படுள்ளது” என பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன்காரணமாக, முள்ளியவளை 4ஆம் வட்டார பகுதியில் இருந்து, பள்ளவெளி பாலமூடாக நந்திகடலுக்கு வழிந்தோடும் வெள்ளநீரானது, வெளியேற வழி இன்றி மக்களின் காணிகளுக்குள் தேங்கி நிற்கக் கூடிய அபாயம் காணப்படுகின்றது” என பொது மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென  கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .