Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலை சகல பஸ்களும் சுற்றி வர வேண்டுமென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ச.கனகரட்ணம் பணிப்புரை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு நகரத்துக்கு வவுனியா போன்ற பிற இடங்களில் இருந்து வருகை தரும் பஸ்கள், வற்றாப்பளை சந்தியுடன் திரும்பி விடுவதாகவும் இதன் காரணமாக, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு நீண்ட தூரம் மக்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளதாகவும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ச.கனகரட்ணத்திடம், அப்பகுதி பொது அமைப்புகள் முறைப்பாடு செய்திருந்தன.
இந்த முறைப்பாட்டை ஆராய்ந்ததற்கமைய, இலங்கைப் போக்குவரத்துச் சபை, தனியார் பஸ்கள் என்பன வற்றாப்பளை சந்தியுடன் திரும்பாது, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலைச் சுற்றி வர வேண்டுமென, முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ச.கனகரட்ணத்தால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பஸ் சாலைகளுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
3 hours ago