Editorial / 2018 ஜனவரி 19 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி பனை, தெனை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத் தலைவரால் தனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி இரணைமடு சந்திப்பகுதியில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையத்தால் பொது மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
குறித்த கள் விற்பனை நிலையத்தை அங்கிருந்து அகற்றி பிறிதொரு இடத்துக்கு மாற்றம் செய்யுமாறு, பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் உட்பட பல பொது அமைப்புக்கள் ஒப்பம் இட்டு, அரசியல்வாதிகள், கிளிநொச்சி மாவட்டச் செயலர் உட்பட பலருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
இது தொடர்பிலேயே கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் இரணைமடுச் சந்தியில் வைத்து தனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்தாக பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
31 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago