2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக இனிவரும் நாள்களில் கடுமையான நடவடிக்கை’

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளனவென, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு. சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், நேற்று (03) நடைபெற்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சட்ட ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக, இனிவரும் நாள்களில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் கூறினார்.

இதன் ஓர் அங்கமாக, சட்டவிரோத மதுபான உற்பத்தி, போதைபொருள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென, மாவட்டச் செயலாளர் தலைமையிலான விசேட குழுவொன்று அமைக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், சட்டவிரோத மணல், கிரவல் அகழ்வு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, கனியவளத் திணைக்களத்திடம் இருந்து முழுமையான அறிக்கையைப் பெற்றப் பின்னர் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெறுகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதற்கு, புதன்கிழமை (04) முதல், பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும்,  சந்திரகுமார் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .