Freelancer / 2022 ஜூன் 28 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் கட்டளையிட்டுள்ளது.
அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரச அதிகாரி ஒருவரை தாக்க முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கான எரிபொருட்கள் கடந்த 23 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நபரெருவரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026