Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 11 , பி.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்காக 4ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் மன்னார் பொலிஸ் ஊடாக குறித்த அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த பெப்பிரவரி மாதம் 18ஆம் திகதியும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசாரணை என்கிற போர்வையில் அச்சுறுத்தும் செயற்பாட்டில் அரசு முன்னெடுத்து வருகின்றமை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் விசாரணை என்கிற போர்வையில் அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றமை சமூக ரீதியில் விசனத்தை ஏற்படுத்தும் செயல்பாடாக உள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
21 minute ago
25 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
34 minute ago
40 minute ago