எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரனை, அடுத்த மாதம் இரண்டாம் திகதி விசாரணைக்கு வருமாறு, வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினூடாக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து, பௌத்த விகாரை அமைப்பது தொடர்பாக, ஜனாதிபதிக்கு வி.எஸ். சிவகரன் கடிதம் அனுப்பியிருந்தார்.
அத்துடன், குறித்த திறப்பு விழா, நாளை மறுதினம் (29) நடைபெற்றால், ஜனநாயக ரீதியில், கறுப்புக் கொடியேந்தி, முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, வி.எஸ்.சிவகரனை, எதிர்வரும் திங்கட்கிழமை (02) காலை ஒன்பது மணிக்கு, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரண்டாம் பிரிவில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago