2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சிவபுரம் பகுதியில் அகழ்வு பணிகள்

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - சிவபுரம் பகுதியில் கடற்படையினரால் அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருள்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நிதவான் நீதிமன்றம், கண்டாவளை பிரதேச செயலகம், கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த அகழ்வு பணியில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா பார்வையிட்டதை அடுத்து, குறித்த அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X