2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சூழலைப் பாதுகாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில், வவுனியா நகரசபையினருடன் இணைந்து சூழலைப் பாதுகாக்கும் சமூக நலன் செயற்றிட்டமான “தூய்மையான வவுனியாநகரம்” எனும் செயற்றிட்டம்,  வவுனியா பழைய பஸ் நிலையத்தில், நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் சமூக நலன் சார்ந்த செயற்றிட்டத்தின் கீழ் வவுனியா நகர்ப்பகுதிகளில் முக்கிய இடங்களில் வைப்பதற்காக முதற்கட்டமாக 36 குப்பை தொட்டிவைத்தல் மற்றும் அதனுடன் இணைந்தவாறான மரநடுகை செயற்றிட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் எஸ். சுஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா நகர சபை தலைவர் இ.கௌதமன், உப நகரபிதா கு. குமாரசாமி, செயலாளர் இ. தயாபரன், நகரசபை உறுப்பினர் ரி.கே. இராஜலிங்கம், வவுனியா பிராந்திய பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர்  மகேந்திரன், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரிஸ்குறாஸ், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலால் டி சில்வா, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு உள்ளிட்ட பலரும் கலந்துதொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .