2025 மே 20, செவ்வாய்க்கிழமை

செயலிழந்துள்ள ஏற்றுநீர்ப்பாசனம்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – புழுதியாறுப் பகுதியில் சுமார் 32 மில்லியன் ரூபாய் செலவில் வடக்குமாகாண சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஏற்றுநீர்ப்பாசனம் பயன்பாடற்ற நிலையில் செயலிழந்து காணப்படுகின்றது.

மாயவனூர் கிராமத்தின் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை நோக்காககக் கொண்டு இப்பிரதேசத்தில் வாழும் 115 பயனாளிகள் பயனடையும் வகையில், 100 ஏக்கர் நிலப்பரப்புக்கு நீர் விநியோகிக்கும் வகையில் நிர்மானிக்கப்பட்ட புழுதியாறு ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம்  பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.

கடந்த 2014ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் 32 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 23-01-2015 அன்று வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட குறித்த ஏற்று நீர்ப்பாசனத்திட்டமே, இவ்வாறு செயலிழந்து காணப்படுகின்றது,

இந்தப் பிரதேசத்தில குறிப்பிட்ட சில விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றபோதும், இந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் குறித்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்துக்குப் பயன்படுத்தும் இயந்திரம் எரிபொருள் மூலம் இயங்குகின்ற இயந்திரமாகக் காணப்படுவதால் அதனை இயக்குவதில் அதிக செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து விவசாயிகளும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் போது ஏற்றுநீர்ப்பாசனத்தை குறைந்த செலவில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது, இந்தப்பிரதேசத்தில் கடுமையான வரட்சி நிலவுவதால் குடிநீர் நெருக்கடி காணப்படுவதாக, இப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X