Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 24 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - செல்வாநகர் கிராமத்தில், வியாழக்கிழமை (21) மாலை, இ;டம்பெற்ற வாள் வெட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினார்.
இந்தத் தாக்குதலில், இருவர் வாள் வெட்டுக்குள்ளாகியதோடு, சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
செல்வாநகர் மாவீரர் துயிலுமில்லத்துக்கு அருகில் உள்ள வீதியில் வசிக்கின்ற ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்தே, அவர் ரவுடிகளை வரவழைத்து, அட்டக்காசம் புரிந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினார்.
வியாழக்கிழமை (21) மாலை 6.20 மணிக்கு வந்தவர்கள் 7.15 மணி வரை அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்று, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், வீடுகளில் இருந்து பெண்கள், சிறுவர்கள் அனைவரும் வயல்களுக்குத் தப்பி ஓடிவிட்டனர் என்றும் இல்லையெனில், அவர்களும் வாள் வெட்டுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்றும், பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்தனர்.
18 minute ago
44 minute ago
50 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
50 minute ago
5 hours ago