2025 மே 21, புதன்கிழமை

‘சேறுபூசுகின்ற நடவடிக்கைக்கு எதிராக கட்சி விசாரணை நடத்தும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் செ.கீதாஞ்சன்

தன் மீது சேறுபூசுகின்ற நடவடிக்கைக்கு எதிராக கட்சி விரைவில் விசாரணை நடத்துமென, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட நான்கு பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீட்டுக்கான கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார் கோவில் மண்டபத்தில், நேற்று (11) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதெ. அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு ​தொடர்ந்துரையாற்றிய அவர், அரசியல் ரீதியான தனது பயணத்தில் ஏற்படுகின்ற வளர்ச்சியைப் பொறுக்கமாட்டாமல், சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன் மேல் சேறுபூசுகின்ற வகையில் அபாண்டமான பொய்களை வெளிப்படுத்தி வருவதாகவும் இது தொடர்பில் எழுத்துமூலம் கட்சிக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியை தான் கோருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சாந்தி எம்.பி, அது நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமானது அல்லவெனவும் கூறினார்.

ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க காலத்தில், தனது கணவரின் தகப்பனாருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட காணியில், தனது கணவர் தற்போது செய்கைப்பண்ணி வருகின்றாரெனவும் இதுதான் உண்மையெனவும், அவர் கூறினார்.

அவரது குறித்த கருத்துக்கு, கட்சி விரைவாக விசாரணை நடத்துமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .