Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 28 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
சைவ சமயத்தவரின் பிரச்சினை, உரிமைகளை தீர்மானிப்பது மன்னார் ஆயர் இல்லமென, தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் தேசகீர்த்தி மனோ சங்கர சர்மா தெரிவித்தார்.
முல்லைத்தீவில், நேற்று (27) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு - கிழக்கு மக்கள் அனைவரும் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தாங்கள் ஓர் ஆசனத்தை மன்னார் மாவட்டத்தில் ஒரு சைவத் தமிழருக்கு ஒரு ஆசனம் தருமாறு ஆறு சுற்றுப்பேச்சு வார்த்தைகளை நடத்தியதாகவும் ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லையெனவும் கூறினார்.
“வடக்கில் சைவ சமயத்தவர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் உரிமைகளையும் தீர்மானிப்பது மன்னாரின் ஆயர் இல்லமாகத்தான் காணப்படுகின்றது. எங்களுக்கு ஒரு பிரச்சினை வரும் போது, அதனை நேரடியாக எங்களுடன் அணுகாமல் ஆயர் இல்லத்துக்குச் சென்று அங்கிருந்து முடிவெடுப்பதுதான் தமிழ் கட்சிகள்.
“எங்களை கடைசிவரைக்கும் மாவை சேனாதிரசா ஆசனம் வழங்குவதாக இழுத்தடித்தார்கள். தமிழர்களின் பெரிய கட்சிகள் எல்லாம் எங்களை ஏமாற்றிய படியால் தனித்துவமான கட்சி அமைத்துள்ளோம். இன்னும் பதிவு செய்யப்படாத காரணத்தால், சுயேச்சைக் குழுவாக களம் இறங்கியுள்ளோம்” எனவும், அவர் தெரிவித்தார்.
“வடக்கு - கிழக்கில் இந்து கோவில்களுடன் தொடர்புடைய காணிகளை எல்லாம் தொல்பொருள் திணைக்களம் பௌத்த மதத்தைச் சார்ந்த ஒரு சிலர் கிறிஸ்தவ ஆதிகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் ஆகிரிமித்து வருகின்றார்கள். இதனை முற்று முழுதாக நிறுத்த வேண்டும்.
“மன்னாரில் இருந்து ஒரு மத பீடத்தைச் சார்ந்தவர்கள் ம தரீதியான கட்சிகளுகும் இன ரீதியான கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லி ஒரு பரப்புரை செய்துகொண்டு வருகின்றார்கள்.
“சைவ சமயம் சார்ந்த அத்தனை உரிமைகளுக்குமாக உருவாக்கப்பட்ட கட்சியே தமிழ்தேசிய சைவ மக்கள் கட்சி. சைவத்தவர்களுக்கு பிரச்சினை வரும்போது, எந்தத் தமிழ் அரசியல்வாதிகளும் குரல்கொடுப்பதில்லை அதுதான் எங்களின் உதயமாக அமைந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
51 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
53 minute ago
1 hours ago