Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 ஜூலை 01 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு அம்பாள்புரம் ஆறாம் கட்டை ஆகிய பகுதிகளுக்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்றியும் பாதைகள் புனரமைக்கப்படாமையினாலும், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனாவினால் உடனடியாக இந்த மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நிலையில் சேவை மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் கடந்த சில மாதங்களாக இப்போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதால் சுமார் 45 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காலையிலும் மாலையிலுமாக 18 கிலோமிற்றர் தூரம் கால்நடையாக பாடசாலைக்கு செல்கின்ற பரிதாபகரான நிலை காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய பகுதியாக காணப்படுகின்ற அம்பாள்புரம் ஆறாம்கட்டை கொல்லவிளாங்குளம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து வசதியின்மை பிரதான வீதி புனரமைக்கப்;படாமை என்பவற்றால் இப்பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் பல்வேறு கஸ்ரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் உள்;ளபாடசாலை ஆரம்ப பாடசாலையாக காணப்படுவதனால் தரம் 5 இற்கும் மேற்பட்ட வகுப்புக்களில் கல்வி கற்கும் சுமார் 45 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்பது கிலோமீற்றர் தொலைவில் உள்ள வன்னிவிளாங்குளம் மற்றும் 15 கிலோமீற்றர் தொலைவில் மாங்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடாசலைகளில் தமது கல்வியை தொடர்கின்றனர்.
இவ்வாறான நிலையில் பாடசாலை மாணவர்;களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையாமல் குறித்த மாணவர்கள் மேற்படி கிராமங்களிலிருந்து ஒன்பது கிலோமீற்றர் தொலைவில் உள்ள வன்னிவிளாங்குளம் வரை கால்நடையாவே பாடசாலைக்கு சென்று தமது கல்வியை கற்று பின்னர் பாடசாலை முடித்து பிற்பகல் ஒன்பது கிலோமீற்றர் கால்நடையாக வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
மேற்படி மாணவர்களின் போக்;குவரத்துப் பிரச்சனை தொடர்பில் அரசியல் வாதிகள் அதிகாரிகள் மட்டத்தில் பிரதேச மக்களால் தெரியப்படுத்;தப்பட்ட போதும், தீர்வேதும் கிடைககாத நிலையில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த மாணவர்;களின் நிலைமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனாவினால் உடனடியாக இந்த மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நிலையில் சேவை மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் கடந்த சில மாதங்களாக இப்போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டதால் இந்த மாணவர்கள் இவ்வாறு நாள் ஒன்றுக்கு 18 கிலோமீற்றர் தூரம் கால்நடையாக சென்று கல்வி கற்று வரும் நிலையினை அவதானிக்க முடிந்துள்ளது.
எனவே தமக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு இப்பகுதி பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago