Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 செப்டெம்பர் 18 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி ஜெயபுரம் மக்கள், தமக்கான வயற் காணிகளைப் பெற்றுத் தருமாறு நீண்ட காலம் விடுத்து வந்த கோரிக்கை நிறைசெய்யப்பட்டு, அவர்களுக்கான காணிகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
1983ஆம் ஆண்டு வன்செயல்களால் பாதிக்கப்பட்டு, கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் குடியேறிய மக்களுக்கு, பண்டிவெட்டிக்குளத்தின் கீழ் உள்ள சுமார் 1,000 ஏக்கர் வரையான காணிகள் அப்போது பயிர்ச் செய்கைகளுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டன.
அதன்பின்னர் ஏற்பட்ட யுத்தம், இடப்பெயர்வுகள் காரணமாக, குறித்த காணிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து, மீள்குடியேற்றத்தின்பின்னர் தமக்கான இந்த வயற் காணிகளை பகிர்ந்தளிக்குமாறு அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனினும், வயற் காணிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவதாகவும் அவற்றை அகற்றுவதில் காலதாமதங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, குறித்த விடயத்தை, அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, மாவட்ட கண்ணிவெடி செயற் பாட்டு பிரிவினருடன் கலந்துரையாடி, குறித்த காணியை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிதரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, வெடிபொருள் ஆபத்துக் காணப்பட்ட 900 ஏக்கர் வயற் காணிகளில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு, பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளை பொதுமக்கள் துப்பரவு செய்வதற்கு உதவுமாறு சிறிதரனிடம் அப்பகுதி கமக்கார அமைப்புகள் விடுத்த கோரிக்கையை அடுத்து அதனைத் துப்புரவு செய்வதற்குரிய நிதியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வயற் காணிகளை, ஜெயபுரத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள், பூநகரிப் பிரதேச செயலகத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
3 hours ago