2025 மே 16, வெள்ளிக்கிழமை

டக்ளஸின் வருகைக்காக கடும் பாதுகாப்பு

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, வவுனியாவுக்கு, இன்று (09) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தை முன்னிட்டு, விசேட அதிரடிப்படையினராலும் பொலிஸாராலும், பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்பு நடைபெற்ற மண்டபம் மற்றும் அதனை சூழ்ந்த பிரதேசங்களில், மேப்பநாய் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இந்தச் சந்திப்புக்கு வந்த பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை ஊடகவியலாளர்களின் பொருள்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .