Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில், விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்கத்தை தேடி, அகழ்வு பணிகள் இன்று (06) காலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த அகழ்வு பணியை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் உள்ளதாக, கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன.
இதன்போது, அகழ்வுக்கான இயந்திரத்தின் அளவு போதாமையால், அன்றைய தினம் அகழ்வு பணிகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago