Niroshini / 2021 ஜூன் 16 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - கற்குழி பகுதியில், இன்று (16) காலை, தனிமைப்படுத்தவுக்குட்படுத்த நபர் ஒருவர், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கற்குழி பகுதியைச் சேர்ந்த கணேசன் இளங்குமரன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த நபர் உட்பட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்ததுக்கு, உள்ளாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று (15) மாலை, வீட்டிலிருந்த குறித்த நபர் காணாமல் போனதைத் தொடர்ந்து, உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.
இதன்போது, இன்று (16) காலை, அவரது சடலம் கிணற்றில் மிதப்பது அவதானிக்கப்பட்டது.
குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
18 minute ago
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
3 hours ago