2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாயை இழந்து பரிதவித்த யானைக்குட்டி மீட்பு

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - பூவரசன்குளம் பகுதியில், தாயை இழந்து தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்று, நேற்று (07) இரவு மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வேலன்குளம் பகுதியில் மூன்று மாதம் நிறைந்த யானைக்குட்டி ஒன்று நேற்று மாலை தனிமையில் அப்பகுதியில் இருப்பதை கண்ட சிலர், இவ்விடயம் குறித்து பூவரசங்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். 

இதையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கு சென்று யானைக்குட்டியை மீட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கிரித்தலை யானைகள் சரணாலயத்துக்கு கொண்டு செல்லவுள்ளதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .