2025 மே 22, வியாழக்கிழமை

திருக்கேதீஸ்வரம் வளைவு; வவுனியாவில் போராட்டம்

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மன்னார் - திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் கட்டுவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (12) காலை 9.30 மணியளவில், வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலில், கவனயீர்ப்புப் போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாகச் சென்ற போராட்டக்காரர்கள், தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை, அமைச்சர் மனோ கணேசனிடம் கையளிக்குமாறு, அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தனர்.

இக்கண்டனப் பேரணியை, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக் கொவில்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X