Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 24 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கான திறன்விருத்தி வகுப்பறை, விளையாட்டு மைதானம் என்பன மாணவர்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (24) முற்பகல் 8 மணியளவில், பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சர்வதேச நாடுகள் போன்று இன்று எமது மாவட்டத்திலும் திறன் விருத்தி வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச நாடுகளைப் போன்றதொரு கற்றல் முறை எமது மாணவர்கள் மத்தியிலும் கொண்டுவரப்படுகின்றமை வரப்பிரசாதமாக மாணவர்களுக்கு அமைகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 170க்கும் மேற்பட்ட திறன்விருத்தி வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வட்டக்கச்சி பிரதேசம் திறன் விருத்தி வகுப்பறை வலயமாக உருவெடுத்த வருகின்றது. அங்குள்ள பாடசாலைகளில் இவ்வாறான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் திறண் வகுப்பறைகள் அதிகரிக்கப்பட்டு மாணவர்கள் நவீன கற்றல் முறைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
அதற்காக என்னால் முடிந்தவற்றையும் செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago